பொன்னமராவதி, செப்.22: பொன்னமராவதி அருகே உள்ள கோபாலபுரத்
திற்கு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.26 லட்சம் மதிப்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் இருந்து கோபால்புரம் செல்லும் சாலை பல வருடங்களாக குண்டும் குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் கிடந்தது.
இந்த சாலையினை சீரமைத்து புதிதாக தார் சாலை போடவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதனையடுத்து, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.26.96 வட்சம் மதிப்பீட்டில் கேசராபட்டி கோபாலபுரம் சாலை தார்சாலையாக போடப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி பொதுமக்கள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.