கறம்பக்குடி, ஆக. 19: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி கண்டியன் தெருவில் வசித்து வருபவர் சண்முகம், கூலிதொழிலாளி. இவருடைய, வீட்டிற்குள் நேற்று மதியம் விஷப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. அதைக் கண்ட அனைவரும் அலறியடித்து வெளியே ஓடினர். இதுகுறித்து, கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர்(பொறுப்பு) கருப்பையா தலைமையிலான வீரர்கள் வீட்டுக்குள் பதுங்கி இருந்த விஷப்பாம்பை உயிருடன் மீட்டு, அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டனர்.
+
Advertisement