புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நடவுக்கு ஏற்ற ரகங்கள் மட்டுமே விற்க வேண்டும்: விதை ஆய்வு துணை இயக்குநர் சுஜாதா உத்தரவு
புதுக்கோட்டை, ஆக. 19: சம்பா பருவத்துக்கு உகந்த நெல் விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில், சம்பா பருவ நெற்பயிர் சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், தனியார் விதை விற்பனையாளர்கள் சான்று விதைகளில் இரு அட்டைகள் (வெள்ளை அல்லது நீலநிறம்) முறையே சான்று அட்டை மற்றும் விவர அட்டை பொருத்தப்பட்ட விதைகளையே விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.விவர அட்டையில் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி நாள், பயிர் செய்ய ஏற்ற பருவம் உள்ளிட்ட 14 வகையான விவரங்கள் விதை சட்ட விதிகளின்படி கட்டாயம் அச்சிட்டிருக்க வேண்டும்.