விராலிமலை, ஆக 12: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கைது செய்ததைக் கண்டித்து, விராலிமலை செக்போஸ்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலிலில் நேற்று ஈடுபட்டனர்.மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் நடந்த குளறுபடி மற்றும் பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ‘இந்தியா’ கூட்டணி கட்சி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நேற்று ஊர்வலமாக சென்றனர். அதில், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட 25 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதைக் கண்டத்து, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை செக்போஸ்ட்டில் காங்கிரஸ் கட்சியினர் 15க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, விராலிமலை காவல் ஆய்வாளர் லதா மறியலில் ஈடுபட்ட ஒருவரை தோளில் கை வைத்து தள்ளியதால் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, மற்ற போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி, அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
+
Advertisement