பொன்னமராவதி, ஆக. 12: பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரை அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.பொன்னமராவதி அடுத்த மறவாமதுரை அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தையும், கொன்னையம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளிக்கட்டிடத்தையும், நல்லூரில் புதிதாக கட்டப்பட்ட நாடக மேடையை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு இலுப்பூர் ஆர்டிஒ அக்பர் அலி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்து, தாசில்தார் சாந்தா, ஒன்றிய ஆணையர்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடே‘ன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மீனாட்சி மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் முத்துச்சாமி வரவேற்றார். இதில் திமுக ஒன்றிய அவைத்தலைவர் முகமது ரபீக், திமுக ஒன்றிய துணைச்செயலாளர்கள் முருகேசன், பாண்டியன், கொன்னையம்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் பிச்சன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாழைராஜன், சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: கிராமத்தில் உள்ள மக்கள் சிறப்பாக வாழவேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் கிராமங்களில் சிறப்பு அக்கறை எடுத்துக்கொண்டு சிறப்போடு செயலாற்றுகின்றார். தமிழ்நாட்டில் மகளிர் சகோதரிகள் நலமாக இருந்தால் தான் நாடு நலமாக இருக்கும் என்று கருதி மகளிருக்காக மகளிர்உரிமை தொகை திட்டத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக கொண்டு வந்தார். அரசு பள்ளியிலே படிப்பதன் மூலம் பல நன்மைகள் பெற முடியும். அரசு பள்ளியில் படிப்பதால் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு உண்டு. அதன் மூலம் டாக்டராகலாம், பொறியாளராகலாம். விவசாயத்துறையில் படிக்கலாம். விரும்பிய பாடங்களை 7.5 சதவீதத்தில் படிக்கலாம்.
அரசு பள்ளியிலே படித்து விட்டு வருபவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் படிப்பு செலவிற்கு கல்வி ஊக்கத்தொகை கொடுக்கிற முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலமைச்சர் தான். அந்த பணத்தை உயர் படிப்பிற்காக எதை வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். பெற்றோர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் செய்யாமல் தானே தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழக முதல்வர் மாணவிளுக்காக பதுமைபெண் திட்டத்தையும், தமிழ் புதல்வன் திட்டத்தையும் தந்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.