விராலிமலை, டிச.11: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் வீதியில் குடியிருந்து வருபவர் வெங்கட்ராமன் ஆட்டோ ஓட்டுநரான இவர் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் காலை குளிப்பதற்காக வீட்டின் முன் பகுதியில் இருந்த தொட்டியில் நீர் எடுப்பதற்கு தொட்டியின் மூடியை விலக்கிய போது உள்ளே அதிக விஷதன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு தண்ணீரில் நீந்தி கொண்டிருந்ததை கண்டு அதிர்சியடைந்தார்.
தொட்டிக்குள் பாம்பு இருக்கு தகவல் பரவியதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் ஒருவித அச்சத்துடன் பாம்பை காண்பதற்கு ஒன்று திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி பணியாளர்கள் நிகழ்விடம் வந்து சுருக்கு கயிறு மூலம் பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.


