கந்தர்வகோட்டை, டிச.11: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சம்பா சாகுபடிக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் விவசாயிகள் முககவசம் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பரவலாக வடகிழக்கு பருவமழை பெய்தது மேலும் டிட்வா புயல் உருவாகி மழை பெய்தது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நெல் நடவு செய்தனர்.
அதற்கு களை பறிந்து வந்த நிலையில் பயிர்களுக்கு பூச்சி தாக்குதல் இருந்தது பயிர்களில் இருந்த பூச்சிகளை அழிக்க வேளாண்மை துறை அலுவலர்கள் பரிந்துரை செய்த பூச்சிக்கொல்லி மருந்தினை விவசாயிகள் வாங்கி பயிர்களுக்கு ஸ்பெரயர் செய்து வருகிறார்கள். வேளான் துறை அலுவலர்கள் கூறும் போது பூச்சிகொல்லி மருந்து தெளிக்கும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், மருந்து தெளிந்தவுடன் சோப்பு போட்டு கை கால்களை நன்றாக கழுவ வேண்டும் என்றும் முடிந்தால் குளிப்பது நன்று என்று தெரிவிக்கிறார்கள்.


