பொன்னமராவதி,டிச.9: பொன்னமராவதி அருகே அரசமலை ஊராட்சியில் அமைச்சர் ரகுபதி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றதொகுதி பொன்னமராவதி அருகே உள்ள அரசமலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அரசமலை ஊராட்சியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக இயற்கை வளங்கள்துறை அமைச்சர் ரகுபதி தனது சொந்த செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தொகுதி பொறுப்பாளர் முத்துக்குமார், வடக்கு ஒன்றியச்செயலாளர் முத்து, ஒன்றியதுணைச்செயலாளர்கள் முருகேசன், சுரேஷ்பாண்டியன், திருமயம் அரசு வழக்கறிஞர் முருகேசன், மாவட்ட பிரதிநிதிகள் தவசுமணி, வாழைராஜன், ஒன்றிய பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் மணிகண்டன், சின்னத்தம்பி, ஆலவயல் முரளிசுப்பையா, மணி, தேனூர் சின்னையா, வார்ப்பட்டு பாலா, பழனிவேல், தகவல் தொழில்நுட்ப அணி விஸ்வநாதன், சுதர்சன், மற்றும் அரசமலை ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


