கந்தர்வகோட்டை,டிச.6: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மண் தினம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் உலக மண் வள தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய தலைமை ஆசிரியை உலக மண்வள தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு விதைகள் பற்றி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மாணவ, மாணவர்கள் பல்வேறு வகையான தாவரங்களின் விதைகளை பெட்டிகளில் சேகரிக்க வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது.

