புதுக்கோட்டை,டிச.6: புதுக்கோட்டையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஸ்டார் விற்பனை, குடில்கள் விற்பனை தொடங்கியுள்ளது.
உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற மிக முக்கியமான, முதன்மையான திருவிழா கிறிஸ்மஸ் பண்டிகையாகும். இயேசு கிறிஸ்து உலகில் அவதரித்தத் திருநாளைக் கொண்டாடும் இந்தப் பண்டிகையை முன்னிட்டு, வருகிற 25ம் தேதி கிறிஸ்தவர்கள் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் அடையாளமாக, கோயிலில் கிறிஸ்மஸ் குடிலை அமைப்பதுபோல் வீடுகளிலும், பள்ளிகளிலும், பணிபுரியும் இடங்களிலும் குடில் அமைத்து வணங்கி மகிழ்வார்கள். அதேபோல் இயேசு பிறந்தபோது வானில் அரிதாகத் தோன்றிய வால் நட்சத்திரத்தின் அடையாளமாகத் தங்கள் வீடுகளில் ஸ்டார்களை கட்டித் தொங்க வைப்பார்கள்.

