பொன்னமராவதி,டிச.5: பொன்னமராவதி அருகே ஏம்பல்பட்டி சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும் குழிகளை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல்-புலவர்ணாகுடி சாலையில் இருந்து ஏம்பல்பட்டி தார் சாலை செல்கின்றது. இந்த சாலையில் பல இடங்களில் தார் பெயர்ந்து பெரும் குழிகளாக கிடக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதிலும் இரு சக்கர வாகன ஒட்டிகள் பெரும் சிரப்பட்டு சென்று வருகின்றனர். எனவே இந்த சாலையில் ஏற்பட்டுள்ள குண்டு, குழிகளை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement

