கந்தர்வகோட்டை, டிச.5: கந்தர்வகோட்டை அருகில் கடன் தொல்லையால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆனந்த பிரகாஷ் (46), இவர் கந்தர்வகோட்டை கடைவீதியில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்திற்கு தேவையான விற்பனை பொருட்களை வாங்குவதற்காகவும், தனது குடும்பச் செலவிற்காகவும் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
+
Advertisement

