இலுப்பூர், டிச. 2: இலுப்பூரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இலுப்பூரில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோயில் உள்ளது. பட்டினத்தாரால் பாடப் பெற்ற இந்த ஸ்தலத்தில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, யாகசாலை அமைக்கப்பட்டு கடம் ஸ்தாபிதம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்து பூர்ணகுதி மற்றும் மகா தீப ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, சொர்ணாம்பிகை மற்றும் பொன்வாசிநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

