புதுக்கோட்டை, டிச.2: புதுக்கோட்டை மாவட்ட அதிமுக பொருளாளர், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் இராமையா சாலை விபத்தில் இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம், வாண்டாக்கோட்டையை சேர்நதவர் விசி ராமையா(70). இவர். நேற்று இருசக்கர வாகனத்தில் தனது வயலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் பூவரசங்குடி திருவரங்குளம் பிரிவுச் சாலையில் சாலையைக் கடக்கும்போது, அப்போது வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு புதுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
+
Advertisement

