Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தாழ்வான பகுதியில் தேங்கிய மழை நீர் மின்மோட்டார் பம்ப் மூலம் உடனடியாக வெளியேற்றம்: அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு

புதுக்கோட்டை, அக்.23: மாவட்டத்தில் பெய்யும் கனமழையின் காரணமாக மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மீட்பு பணிகளை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் , அடப்பன்குளம், மாநகராட்சி வார்டுகளில் கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ள பகுதி மீட்பு பணிகளை இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்கள் பாதுகாப்பாக இருந்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். அந்த வகையில், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரினை உடனடியாக கால்வாய்களில் சென்றடையும் வகையில் பணிகளை மேற்கொள்ளுதல், மழையினால் விழும் மரக்கிளைகளை உடனடியாக அப்புறப்படுத்துதல், மழைக்காலங்களில் மின் விநியோகத்தினை சீராக பொதுமக்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்கூடியது.

அதன்படி நேற்று, புதுக்கோட்டை மாநகராட்சி, அடப்பன்குளம், 7வது-வார்டு, பள்ளிவாசல் தெரு மற்றும் சின்ன அடப்பன் குளம் தெரு ஆகிய பகுதிகளில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ள இடங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நேற்று பெய்த இடையறாத மழையால் சில தாழ்வான குடியிருப்பு பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் சிரமம் அடையாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை, காவல் துறை மற்றும் மின்வாரிய துறையினருடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மழைநீர் வடிகால்களில் தடைகள் உள்ள பகுதிகள் குறித்தும், எந்த பகுதிகளில் கூடுதல் வடிகால் வசதி தேவைப்படுகிறது என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது, மழைநீர் வடிகால்களை உடனடியாக சுத்தம் செய்து, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றுமாறும், இப்பணிகள் அனைத்தையும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் விரைவாக முடித்து பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி சரிசெய்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கனமழையின்போது பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் பின்பற்றிட வேண்டும் என்றும், பேரிடர் காலங்களில், மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையின் 04322-222207 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனறும் தெரிவித்தார். இந்த ஆய்வில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் காவிரி-வைகை-குண்டாறு).ரம்யாதேவி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர்;.ஐஸ்வர்யா, புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையர் நாராயணன், தெற்கு மாநகர செயலாளர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

பேரிடர் பகுதிகளில் வசிப்பவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையின் 04322-222207 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.