திருப்பூர், டிச.13: திருப்பூர் பொங்கலூர் காந்திநகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது பகுதியில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள். எங்களுக்கு வீட்டுமனை சொந்தமாக இல்லாததால் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகிறோம். எனவே எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இது குறித்து பலமுறை மனுக்கள் கொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் எங்கள் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
+
Advertisement


