நாகப்பட்டினம், ஜூலை 11: தடுப்பூசி பணியில் எம்எல்எச்பி பணியாளர்களை உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் புனிதா முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சத்தியா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கிராம சுகாதார செவிலியரின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். தடுப்பூசி பணியில் எம்எல்எச்பிஐ உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் காலி பணியிடங்களை பயிற்சி பெற்றவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
+
Advertisement