Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிஏபி உற்பத்தி இருப்பு குறைந்துள்ளதால் மாற்று உரம் பயன்படுத்த வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் சாகுபடி பருவம் தொடங்கப்பட உள்ளதால் தங்களது நெல் வயல்களில் அடியுரம் இடுவதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றார்கள். இந்நிலையில் பன்னாட்டு சந்தையில் உர உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால் உர நிறுவனங்களில் டிஏபி உற்பத்தி மற்றும் அதன் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் அதற்கு மாறாக சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை விவசாயிகள் பயன்படுத்தலாம்.

மேற்படி சூப்பர் பாஸ்பேட் உரத்தில் பயிர்களின் வளர்ச்சிக்கும் தேவைப்படும் சுந்தகம் மற்றும் சுண்ணாம்பு சத்துக்கள் இருப்பதால் விவசாயிகள் அனைவரும் இதனை பயன்படுத்துவதன் மூலம் அதிக மகசூலை பெறலாம். எனவே விவசாயிகளின் நலன் கருதி. சூப்பர் பாஸ்பேட் (431.6 டன்) காம்ப்ளக்ஸ் (5,170 டன்) மற்றும் யூரியா (3,941 டன்) ஆகிய உரங்கள் போதிய அளவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களைபயன்படுத்தலாம் என்றும் இது தொடர்பான விவரங்கள் மற்றும் புகார்களுக்கு சம்பத்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.