Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அந்தியூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

அந்தியூர்,ஜன.9: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள மங்கலம் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறிகாட்டு வழி மையம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அந்தியூர் வெங்கடாசலம் எம்எல்ஏ தலைமையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் முனைவோர்கான ஆலோசனைகள் மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல் ஆகியன மேற்கொள்ளப்பட்டது.

இந்த முகாமில் 663 ஆண்கள், 416 பெண்கள், 13 மாற்றுத்திறனாளிகளும் வேலை வாய்ப்பு வேண்டி கலந்து கொண்டனர். இதில் 75 வேலை அளிக்கும் நிறுவனங்கள் இரண்டு திறன் பயிற்சி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 224 வேலையாளர்களை தேர்வு செய்தனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உண்டான பணி நியமன ஆணைகளை அந்தியூர் வெங்கடாசலம் எம்எல்ஏ வழங்கினார்.

இந்த முகாமில் மாவட்ட வேலை வாய்ப்பு உதவி இயக்குனர் ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூங்கோதை, மங்கலம் கல்வி நிறுவனர் கந்தசாமி, பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத்தலைவர் பழனிச்சாமி, பேரூர் கழக செயலாளர் காளிதாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.