ராமநாதபுரம், ஜூலை 23: பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பச்சரிசி மாவு, திரவியப்பொடி, பால், சந்தனம், நெய், விபூதி உள்ளிட்ட 18 பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
கடலாடி அருகே உள்ள மாரியூர் பவளநிற வள்ளியம்மன் உடனுரை பூவேந்தியநாதர் கோயிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு பலவகை அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்பாள், உற்சவர் ரிஷப வாகனம் மற்றும் திமிங்கல வாகனத்தில் வீதி உலா நடந்தது.
ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர், முகவை ஊரணி விசாலாட்சி உடனுரை காசி விஸ்வநாதர் கோயில், நயினார்கோயில் சவுந்தரநாயகி அம்மன் உடனுரை நாகநாதர் உள்ளிட்ட சிவன் கோயில்களிலுள்ள நந்தியம் பெருமானாருக்கு பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.