ஜெயங்கொண்டம், ஜூலை 10: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் கழுமலைநாதர், சென்னீஸ்வரர், சோழீஸ்வரர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர், ஆண்டிமடம் அகத்தீஸ்வரர், உடையார்பாளையம் பயறனீஸ்வரர், பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடைபெற்றது.
அப்போது, நந்தியெம்பெருமானுக்கு திரவியபொடி, மாவுப்பொடி, மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள் நடந்தது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர், ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் ஆகிய கோயில்களில் நந்தியம்பெருமானின் பிரகார உலா நடைபெற்றது.