வேலூர், ஜூலை 11: வேலூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் காதலித்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஜெயக்குமாரை எச்சரித்துள்ளனர். ஆனால் ஜெயக்குமார் சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாதபோது, அவரது வீட்டிற்கு சென்று திருமணம் செய்வதாக கூறி சிறுமியிடம் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவரை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்தபோது சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தனர். அதன்பேரில் ஜெயக்குமார் மீது போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement