நாமக்கல், ஜூலை 9: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்ற நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கபிலர்மலை ஒன்றியம் சேளூர் கிராம மக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சேளூர் ஆதிதிராவிடர் தெருவில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரில் உள்ள பொது கிணறு அருகே, புறம்போக்கு நிலத்தை பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே போலீஸ்காரர் ஒருவர், அந்த இடத்தை ஆக்கிரமித்து கொண்டார். ஆக்கிரமிப்பை அகற்றாமல், அதிகாரிகளும் அவர்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர். அந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
+
Advertisement


