குன்னம், அக். 30: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் வடக்கலூர் பஞ்சாயத்து உட்பட்ட வ.அகரம் கிராமத்தில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் அங்கன்வாடி மையம், பள்ளி வளாகங்கள், கோயில்கள், வீடுகள் ஆகிய இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும் முதிர் கொசுகளை கட்டுப்படுத்தும் வகையில் புகை மருந்து அக்கிராமத்தில் அடிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட மலேரியா அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலைப் பூச்சிகள் வல்லுநர் ராமர், ஊராட்சி செயலாளர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பஞ்சாயத்து பணியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
