ஜெயங்கொண்டம், நவ.29: தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் தமிழர்களின் விடுதலைக்கு உயிர் நீத்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கம் சார்பில் மறைந்த ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த பிரபாகரன் உள்ளிட்ட தியாகிகளுக்கு தமிழர் நீதி கட்சி மற்றும் ஏர் உழவர் சங்கத் தலைவர் சுபா இளவரசன் தலைமையில், மகளிர் அணி தலைவி கவியரசி இளவரசன் முன்னிலையில் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் தமிழ் ஈழத்தை மீட்போம், தமிழைக் காப்போம், சாதியை மறுப்போம், தமிழனாய் இருப்போம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி வீரவணக்கம் செலுத்தினர். இதில் தமிழர் நீதி கட்சியினர் மற்றும் ஏர் உழவர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட தமிழ் பற்றாளர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

