பாடாலூர், செப் 27: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தில் தெரணி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை, பார் உள்ளது. கடந்த 24 ம் தேதி இரவு குடிபோதையில் பணம் கொடுக்காமல் மதுபானம் மற்றும் தின்பண்டங்கள் கேட்டு அங்கு பணியாற்றிய ஊழியரிடம் 3 பேர் தகராறு செய்தனர். மேலும் ஆபாச வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பார் உரிமையாளர் ராஜேந்திரன் பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் எஸ்ஐ ஜெயக்குமார் விசாரணை நடத்தி, தகராறு செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் நந்தகு மார் (26), முருகேசன் மகன் சூரியபிரகாஷ் (27), சுப்பிரமணி மகன் பிரபு (40), ஆகியோரை கைது செய்தார். பின்னர் வழக்குப்பதிந்து 3 பேரையும் பெரம்பலூர் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.