குன்னம், செப்.27: குன்னம்அருகே பெரியம்மா பாளையம் கிராமத்தில் இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்தில் சட்டப்பணிகள் குழு சார்பில் பெரியம்மாபாளையம் கிராமத்தில் நூறுநாள் வேலையில் ஈடுபடுபட்டிருந்தவர்களிடையே இலவச சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் குன்னம் வழக்கறிஞர் சங்க தலைவர் தனவேல், மற்றும் வழக்கறிஞர்கள், இனியவன், ராஜசேகர், அழகேசன், மற்றும் குன்னம் வட்ட சட்டப்பணிகள் குழு தன்னார்வலர் நூர்ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம்சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சட்ட ஆலோசனைகளை வழங்கினர்.