பெரம்பலூர்,நவ.21: பெரம்பலூரில் சிஐடியுஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புது பஸ்டாண்டு வளாகத்தில் நேற்று (20ம் தேதி) வியாழக்கிழமை மாலை பெரம்பலூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் போராட்டம் நடத்திய திருவாரூர் மாவட்ட சிஐடியு தலைவர் அனிபா மற்றும் ஆட்டோ சங்க தலைவர்களை கைது செய்த திருவாரூர் மாவட்ட காவல் துறையைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்ட சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரெங்கநாதன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் அகஸ்டின் கண்டன உரையாற்றினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கலையரசி வாழ்த்துரை பேசினார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகுமார், கிருஷ்ண சாமி, சரவணன், பரமசிவம், பெரியசாமி, சந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


