ஜெயங்கொண்டம், செப்.18: உடையார் பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெரியாரின் 147ஆவது பிறந்ததினம் சமூகநீதிநாள் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். உதவித்தலைமையாசிரியர் இங்கர்சால் வரவேற்றார், முதலில், சமூகநீதிநாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராக ‘‘தமிழ்ச்செம்மல்” விருது பெற்று பணிநிறைவு பெற்ற பள்ளி துணை ஆய்வாளரும் புலவர் ஐயன்பெருமாள் கலந்துகொண்டு பெரியாருடன் அவர் இந்தபகுதிக்கு வரும் போது அவருடன் பயணித்த அனுபவங்களையும், தமிழ் எழுத்து சீர்திருத்தங்களையும், பிறமொழிகலப்பில்லா தமிழ்கொள்கைகளையும், பெண் விடுதலை, சமூகநீதி பற்றையும் எடுத்துக் கூறினார், மாணவி அகஷ்யா பெரியாரின் சமூகநீதி என்ற தலைப்பில் பேசினார்.
மாணவி சுஸ்மிதா ‘‘தாடியும் தடியும்” என்ற தலைப்பில் பெரியார் பற்றிய கவிதை வாசித்தார், மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது, நிகழ்வில், ஆசிரியர்கள் செல்வராஜ், வனிதா, சாந்தி, மஞ்சுளா பூசுந்தரி, தமிழரசி, காமராஜ் இராஜசேகரன், லூர்துமேரி, தமிழாசிரியர் இராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், முடிவில், பாவை சங்கர் நன்றி கூறினார்.