குன்னம், செப். 18: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்பெரம்பலூர் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு 10 பேருக்கு உடனடி பட்டாக்களை வழங்கினார். கீழப்பெரம்பலூர், வயலப்பாடி ஆகிய கிராம மக்கள் மகளிர் உரிமைத்தொகை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித் துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மற்றும் பல துறைகளில் இருந்து தங்களுக்கு தேவையான திட்டத்தில் மக்கள் மனுக்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், பி.கே. சேகர் குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, சமூக நல வட்டாட்சியர் சற்குணம், வடக்கலூர் வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் மனோகரன், சேஷாத்திரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில், 1000திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.