ஜெயங்கொண்டம் அக்.17: மாணவிகள் ஒவ்வொருவரும் தன் பிறந்த நாளில் ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்தல். உடையார் பாளையம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு கால நிலை மாற்ற இயக்கத்தின் பசுமைப்பள்ளி திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் விழிப்பணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் முல்லைக்கொடி தலைமையில், உதவித்தலைமை ஆசிரியர் இங்கர்சால் முன்னிலையில் முதலில் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மேலும் சுற்றுச்சூழல் சார்ந்த ஓவியப்போட்டி, கவிதை, சுலோகம் எழுதுதல் போட்டி நடைபெற்றது. இதில் 298 மாணவிகள் கலந்து கொண்டனர். சிறப்புவிருந்தினராக மாவட்ட சுற்றுச்சூழல் ஸ்வீட் அறக்கட்டளை நிறுவனர் இளவரசன் கலந்துகொண்டு காலநிலை மாற்றம் சுற்றுச்சூழலை பாதுகாக்க சுற்று புறத்தை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும், மாணவிகள் ஒவ்வொருவரும் தன் பிறந்த நாளில் ஒரு மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்றார்.
மேலும் மழைக்காலம் என்பதால் மாணவிகள் தயாரித்த விதைப்பந்தை நீர்நிலை அருகில் வீசப்பட்டன, தமிழக அரசின் ஆறுகோடி பனைவிதைப்பு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகள் அருகில் உள்ள நீர்நிலை ஏரி ஓரமாக பனை விதை விதைத்தனர். நிகழ்வில் அறக்கட்டளை பொறுப்பாளர் உமாதேவி ஆசிரியர்கள் மஞ்சுளா, காமராஜ், பாவைசங்கர், தமிழாசிரியர் இராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர், நிகழ்வை பசுமைப்படை இராஜசேகரன் ஒருருங்கிணைத்தார்.