பெரம்பலூர்,அக்.17: அனுக்கூர் பெரிய ஏரியில், பெரம்பலூர் வனக் கோட்டம் சார்பாக மாபெரும் பனை விதை நடும் விழா நடை பெற்றது. மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் பங்கேற்பு. தமிழ்நாடு முழுவதும் 6கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி திட்டத்தித்தின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் கிராமத்திலுள்ள பெரிய ஏரியில், பெரம்பலூர் வனக் கோட்டம், வனவியல் விரிவாக்க மையம், சித்தளி மற்றும் பசுமை பயணம் தன்னார்வலர்கள் இணைந்து மாபெரும் பனை விதை நடும் விழா பனை விதைக்க படை திரட்டுவோம் என்கிற பெயரில் நடத்தப்பட்டது.
6000 விதைகள் சேகரிக்கப் பட்டு மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில், பெரம்பலூர் மாசு கட்டுப்பாடு துறை, வட்டார வளர்ச்சித் அலுவலர், தாசில்தார், பள்ளிக் கல்வித்துறை, வனச்சரகர்கள், களப்பணியாளர்கள், ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பனைவிதை நடவு செய்தனர். மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் பனை மரத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்,
வனவியல் விரிவாக்க மைய விளம்பர அலுவலர் சங்கரேஸ்வரி ஏற்பாடுகளை செய்திருந்தார். பசுமை பயணம் தொண்டு அறக் கட்டளை நிறுவனர் இளைய ராஜா, பெரம்பலூர் வன சரக அலுவலர், சமூக காடுகள் வனச் சரகர், TAP II வனச் சரகர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று விதைகளை நடவு செய்தனர்.