குன்னம், செப். 17: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லெப்பைக்குடிக்காடு பேரூர் கழகத்தில் தமிழ்நாட்டை தலைகுனியவிட மாட்டோம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
லெப்பைக்குடிக்காடு சந்தை திடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு பேரூர் திமுக சார்பில் நகர செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜாகிர் உசேன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ரசூல் அகமத் மற்றும் 15 வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் பிஎல்ஏ 2 பொறுப்பாளர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி லப்பை குடிக்காடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பும் நடைபெற்றது,