பெரம்பலூர், செப். 17: தனித்தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகிறது. 2025 ஆகஸ்டு தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுவதாகபெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத் ராய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் கல்பனாத்ராய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
2025 ஆகஸ்டு 18ம் தேதிமுதல் 22ம் தேதிவரை நடைபெற்ற தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் www.dge.tn.gov.in http://www.dge.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் Notification நோட்டிபிகேஷன் என்ற அய்க்கானை கிளிக்செய்து, அதில் ESLC (Private Appearance) Examination என்ற பக்கத்தில் ESLC Result AUG 2025 என்பதனைக் கிளிக்செய்து, தங்களது பதிவுஎண் மற்றும் பிறந்த தேதியினை (DD/MM/YYYY) பதிவுசெய்தால் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.