குன்னம், செப்.13: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பெருமத்தூர் குடிகாடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஊர் மக்கள் சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியும் மற்றும் முள்வேலி அமைத்து அனுபவித்து வருவதாகவும், இந்த ஆக்கிரமைப்பை அகற்றக்கோரி அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது அளித்த புகாரின் பேரில் குன்னம் தாசில்தார் சின்னதுரை மற்றும் மங்களமேடு காவல்துறையினர் கிராம மக்கள் சார்பில் போடப்பட்டிருந்த முள்வேலி கம்பியை அகற்ற பெருமத்தூர் குடிக்காடு கிராமத்திற்கு வந்தனர். அப்போது கிராம மக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் இடத்தை அளந்து காட்டி 50 க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் ஆக்கிரமிப்பு இடத்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.