பெரம்பலூர், செப்.13: பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை அருகில் குன்னம் வட்டம் காருகுடியில் பழமையான அய்யனார் கோயில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக அந்த கிராம மக்களே இந்த கோவிலை பராமரித்து வருகின்றனர். மேலும் கோயிலுக்கு மின்சார கட்டணம் கிராமமக்கள் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது.
தற்போது இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதனால் கோவிலில் உண்டியல் வைக்கப் போகிறோம் என்றும், தொடர்ந்து மக்களுக்கு தொல்லை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதில் எந்த பங்களிப்பும் செய்யாத இந்து சமய அறநிலையத்துறை எதன் அடிப்படையில் கோவிலை சொந்தம் கொண்டாடுகிறது ஏன்? என்றும், எனவே இந்து சமய அறநிலையத்துறை காருகுடி அய்யனார் கோயிலை கையகப்படுத்தும் முடிவை கைவிட மாவட்ட ஆட்சியர் உத்தரவிடவேண்டும் என கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.