குன்னம், ஆக. 11: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி. பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பெரம்பலூர் வட்ட வருவாய்துறையினர் இணைந்து குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
மேலும் இந்த மனு விசாரணை முகாமில் குன்னம் வருவாய் வட்டாட்சியர் சின்னதுரை, பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வீரமணி, ராமர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மனு விசாரணை முகாமில் மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டு 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.


