பாடாலூர், அக். 10: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடந்தது. இதற்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) வஹிதா பானு தலைமை தாங்கி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் தலைமலை அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர்கள் மோகன், அன்பரசு, தலைமலை, வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
இதில் மாணவர்களுக்கு புரியும் வகையில் தொடக்கநிலை அடிப்படை திறன் ஆய்வு செய்தல், அடிப்படைத் திறனறிதல், கற்றல் விளைவு, அடைவு நிலை அட்டவணை, அடிப்படை எண்கள் அறிதல், அடிப்படை எழுத்தறிதல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியன சார்ந்தும் இல்லம் தேடி கல்வி மைய அடிப்படை செயல்பாடுகள் பற்றி மாணவர்களுக்கு எவ்வாறு எளிய முறையில் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் 65-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இறுதியல் ஆசிரியர் பயிற்றுநர் பரிமளா அனைவருக்கும் நன்றி கூறினார்.