ஜெயங்கொண்டம், டிச.8: ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேனிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் இயக்கம் மற்றும் ஜெயங்கொண்டம் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம் இணைந்து, மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. இதில் தாளாளர் அருட் தந்தை தாமஸ் லூயிஸ் மற்றும் தலைமை ஆசிரியர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் இயக்க தலைவர் நல்லாசிரியர் சார்லஸ் ஆரோக்கியசாமி அனைவரையும் வரவேற்றார்.
ஜெயங்கொண்டம் ராயல் சென்டினல் லயன்ஸ் சங்க தலைவர் மரிய கிறிஸ்துராஜ் உரையாற்றி சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் ராஜன், சண்முகம், அன்பரசன், சிவகுமார், வெர்ஜின், மதிவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இக்கூட்டத்தில் 350 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். 55 பேர் அறுவை சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டு சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆசிரியர் ஆல்பர்ட் பதிவு செய்தார். ராஜதுரை நன்றி கூறினார்.


