பெரம்பலூர்,நவ.7: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜ மாவட்ட மகளிரணி தலைவர் விஜயா தலைமை வகித்தார். மாவட்ட பொதுசெயலாளர்கள் வரதராஜ், உமாஹைமாவதி, மாவட்ட துணைத் தலைவர் தேவேந்திரபாலாஜி, மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன், மாவட்ட போராட்டக் குழு தலைவர் வேலுசாமி உட்பட பலர் பேசினர். சிறப்பு விருந்தினராக மாநில மகளிரணி தலைவர் கவிதா கலந்துகொண்டு பேசினார்.
நரேந்திர மோடி பிரதமர் ஆனதற்குப் பிறகுதான் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை என்பதை மாற்றி, பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்ச உச்சபட்ச தண்டனை கொடுக்கணும்ங்கிறத கொண்டு வந்தாரு. பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தனிச் சட்டம், தனி நீதிமன்றம் இப்படி மக்களுக்கு, பெண்களுக்கு பாதுகாக்கக் கூடிய ஒரு அரசாங்கத்தின் சட்டங்களைக் கொண்டு வந்தவர் தான் பிரதமர் நரேந்திர மோடி.
ஆகவே, பெண்கள், பொது மக்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வது 4 மாதம் தான் இருக்கு. வரக்கூடிய தேர்தல்ல, பெண்கள் நம்ம கையிலதான் இந்த ஆட்சி மாற்றம் என்பதை கொடுக்கக் கூடிய சக்தி நம்ம கையிலதான் இருக்கு என பேசினார். பின்னர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 30 பெண்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
