பெரம்பலூர், நவ.7: பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் 5.11.2025 அன்று 72வது அனைத்து இந்திய கூட்டுறவு வாரவிழாவை முன்னிட்டு பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர், வாரவிழா குழுத்தலைவர் க.பாண்டியன் தலைமையில் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் 14.11.2025 முதல் 20.11.2025 வரை கூட்டுறவு வாரவிழா கொண்டாடுவதை முன்னிட்டு கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், பள்ளி மாணவ,மணாவிகளுக்கு கவிதைப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுபோட்டி, துறைப்பணியாளர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்துதல் மற்றும் சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் பா.சிவகுமார், துணைப்பதிவாளர் (பயிற்சி) அ. ஜெகன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவல அ பிரிவு கண்காணிப்பாளர் இரா.சோ.ரமேஷ், ஆ பிரிவு கண்காணிப்பாளர் மோகன்ராஜ், பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாட்சியர் த.கௌசின், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெரம்பலூர் கள மேலாளர் சீனிவாசன், ஆவின் விரிவாக்க அலுவலர் மகாலெட்சுமி, துணைப்பதிவாளர் (பால்வளம்) அலுவலக முதுநிலை ஆய்வாளர் போ.ராஜகோபல், கைத்தறித்துறை அலுவலக பணியாளர் குணசேகரன் அகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் த.சாமிநாதன் செய்திருந்தார்.
