பெரம்பலூர்,நவ.7: பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக கண்ணன் நியமனம். தமிழக அளவில் நேற்று முன் தினம் மாலை தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் முருகானந்தம் பிறப்பித்த உத்தரவில், மாநில அளவில் மாவட்டவருவாய் அலுவலர்கள் நிலையிலான 26பேர்களுக்கு பணிமாறுதல் உத்தரவுக்கான ஆணையினை பிறப்பித்து இருந்தார்.
இதன்படி பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணி புரிந்து வந்த வடிவேல் பிரபு என்பவர், புதுக்கோட்டை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை (நில எடுப்பு) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சென்னை, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இணை ஆணையரான, மாவட்ட வருவாய் அலுவலர் G.கண்ணன் என்பவர் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
