தா.பழூர், அக்.7: அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு உலக ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு தா.பழூர் லயன்ஸ் சங்கம் சார்பில் செஞ்சுடர் ஆசான் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக தா.பழூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக கடைவீதியின் முக்கிய வீதிகள் வழியாக தனியார் மண்டபம் வரை சென்றனர். பின்னர் ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து செஞ்சுடர் ஆசான் விருது சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஆசிரியர் ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றியத்தில் உள்ள தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்களை கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியில் சிறப்பாக பணியாற்றிய மற்றும் பள்ளியின் தேர்ச்சி 100 சதவீதம் வழங்கிய, பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்த, என பணியாற்றிய ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக செஞ்சுடர் ஆசான் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.