தா.பழூர் நவ. 6: முத்துவாஞ்சேரி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி விற்றரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான காவல்துறையினர் முத்துவாஞ்சேரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் அரசு அனுமதி இன்றி பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சோதனை மேற்கொண்டனர்.
இதில், முத்துவாஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்த மணிவேல் (50) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது, அவரது வீட்டின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிவேலை கைது செய்தனர்.
