தா.பழூர், ஆக.5: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்ற போலீசார் ஸ்ரீபுரந்தான் பெருமாள்கோயில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி (51) என்பவர் வீட்டிலும் மற்றும் அதே ஊர் காளியம்மன் கோயில்...
தா.பழூர், ஆக.5: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்ற போலீசார் ஸ்ரீபுரந்தான் பெருமாள்கோயில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி (51) என்பவர் வீட்டிலும் மற்றும் அதே ஊர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த வெண்ணிலா ( 50 )என்பவரது வீட்டிலும் சோதனை செய்தனர். இருவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ஈஸ்வரி மற்றும் வெண்ணிலா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.