Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி

பெரம்பலூர், ஜூலை 24: பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (23ம் தேதி) பெரம்பலூர் துறையூர் சாலையில் உள்ள மாவட்ட சாரண, சாரணியர் கூட்ட அரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் தரை தளத்திலும், முதல் தளத்திலும் தனித் தனியாக நடைபெற்றது.

போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் (பொ) சுகன்யா தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு கவுல் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை ரமணி, குரும்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை பூஞ்சோலை, காரை அரசு மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை கனிமொழி ஆகியோர் நடுவர்களாக பணி புரிந்தனர்.

இதில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு அ-பிரிவு மாணவி கௌசல்யா முதலிடமும், மேலப்புலியூர் அரசு மேல் நிலைப்பள்ளி 9ம் வகுப்பு ஆ- பிரிவு மாணவி உஷா 2ம் இடமும், வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு ஆ- பிரிவு மாணவி பிரபா 3ம் இடமும், ஆலம்பாடி அரசு ஆதி திராவிடர் நல உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு அ- பிரிவு மாணவன் ஜீவிதன், லெப்பை குடுகாடு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி 10ம் வகுப்பு இ- பிரிவு மாணவி தர்ஷினி ஆகிய இருவரும் ஆறுதல் இடங்களும் பெற்றனர்.கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகளுக்கு வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் முத்துராஜ், வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர் கலைவாணி, பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் செந்தில்நாதன் ஆகியோர் நடுவராக பணிபுரிந்தனர்.

இதில் பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரி முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவன் சுரேந்திரன் முதலிடமும், வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முது கலை இரண்டாம் ஆண்டு மாணவி கௌசல்யா 2ம் இடமும், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி 2ம் ஆண்டு மாணவி சத்யா 3ம் இடமும் பெற்றனர். இந்த போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.