பாடாலூர், ஆக.2: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கோயில்களில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள், பெண்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி...
பாடாலூர், ஆக.2: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கோயில்களில் ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பொதுமக்கள், பெண்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதே போல் ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலும் பக்தர்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
மேலும், பாடாலூர் பூமலை சஞ்சீவிராயர் கோயில், வழித்துணை ஆஞ்சநேயர் கோயிலிலும் சுவாமிக்கு பால், பன்னீர், மஞ்சள், புஷ்பம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சிறப்பு அபிஷேகத்தில் செட்டிகுளம், பாடாலூர் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர். நாட்டார்மங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ், பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது.