தா.பழூர், டிச.5:தா.பழூர் வட்டாரத்தில் சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சியில் 140 இளைஞர்கள் பங்கேற்றனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக சமுதாய திறன் பள்ளி மூலம் இளைஞர்களுக்கு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்ப்பை தமிழ் நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ( மகளிர் திட்டம்) சமுதாய திறன் பள்ளிகள் வாயிலாக அனுபவமிக்க முதன்மை பயிற்றுனர்கள் மற்றும் உள்ளூர் நிபுணர்கள் தாங்கள் சொந்த கிராமங்களில் உள்ள சமுதாய உறுப்பினர்களுடன் களஅறிவை நேரடியாகப் பகிர்ந்து கொள்ள ஏதுவாக பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டுள்ளது. அதாவது சுய தொழில் சார்ந்த பணிக்கான பயிற்சிகளும் நேரடி வேலைவாய்ப்பு பயிற்சிகளும், சமுதாய திறன் பள்ளி மூலம் வழங்கப்படுகிறது. அந்த வைகையில் தா.பழூர் வட்டாரத்தில் 7 ஊராட்சிகளில் சமுதாய திறன் பள்ளி அமைக்கப்பட்டு 6 வகையான பயிற்சிகளில் 140 இளைஞர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
+
Advertisement

