Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரம்பலூர் எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர் முகாம்

பெரம்பலூர்,ஆக.1: பெரம்பலூரில் எஸ்பி ஷ்யாம்ளா தேவி தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் 30 மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி, தனது அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களை சந்தித்து மனுக்களைப் பெற்று, குறைகளுக்கு தீர்வு கண்டு வருகிறார். அதன்படி, நேற்று புதன்கிழமை எஸ்பி ஷ்யாம்ளா தேவி பொதுமக்களிடம் மனுவைப் பெற்றார். மேலும், இந்த சிறப்பு மனு முகாமில் பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலை மையிடம்) மதியழகன் மற் றும் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்களமேடு, அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மருவத்தூர், மாவட்ட மதுவிலக்கு அம லாக்க பிரிவு, பெரம்பலூர் மற்றும் மங்களமேடு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து காவல் நிலை யங்களை சேர்ந்த காவல் துறையினர் மற்றும் சிறப்பு பிரிவு காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில், 30 மனுக்கள் பெற்றப்பட்டு, நடவடிக்கைக்காக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மனு விசாரணை முகாமில் கலந்து கொள்ள வருவோர் எஸ்பி அலுவலகம் வந்து செல்வதற்காக பாலக்கரை யிலிருந்து எஸ்பி அலுவ லகத்திற்கும், மீண்டும் எஸ்பி அலுவலகத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கும் பேருந்து வசதி செய்யப்பட்டது. இன்று நடைபெறும் கல்லூரிகள் மேலும், பெரம்பலூர் அரசு தொழில் நுட்பக் கல்லூரியிலும், இன்று (ஆக.1ம் தேதி) வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரி, குன்னம் அரசு தொழில் நுட்ப பயிற்சி நிறுவனம், ஆலத்தூர் அரசு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம், தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை அறிவியல் கல்லூரியிலும், வரதராஜன் தொழில்நுட்ப கல்லூரியிலும், ரோவர் பொறியியில் கல்லூரியிலும், நாளை 2ஆம் தேதி ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைறுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான ஒரு மாணவர்கூட விடுபடாத வகையில் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளருக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தினார்.