பெரம்பலூர், ஜூலை 11: பெரம்பலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஆணையின்படி கூட்டுறவுத்துறை அமைச்சரின் மானிய கோரிக்கையின் போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் அறிவிப்பு எண்.3-ல் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்களின் குறைகளை தீர்வு காணும் வகையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்கள் தங்களது பணி தொடர்பான குறைகள் இருப்பின் மனுவாக அளித்து பயன் பெறலாம். மேலும் பணியின் போதும் வேறு வகையிலும் ஏற்படும் குறைகள் தொடர்பாகவும் மனுக்களை அளித்திடலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.